கோலிவுட் தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது இல்லை. அப்படிக் கொடுத்தாலும் ஓரவஞ்சனையாகச் செயல்படுகிறது. தமிழ்ப் பெண்களுக்கு என்று ஓர் அமைப்பு ஒன்றை உருவாக்கினால் கட்டாயம் அந்த அமைப்பிற்கு உதவி செய்வேன் என்று வருத்தத்துடன் கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நடிகைகளில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவுதான்.
இன்றைய நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தக் குறையைப் போக்கி இருக்கிறார். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் அளித்த பேட்டியில், "மற்ற மொழி நாயகிகள்தான் தமிழில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கோலிவுட்டில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
"நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்து அதற்கு உறுப்பினர்களாக அவர்களைச் சேரச் சொனனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகைகள் வருவார்களா?
"இந்தியில் இந்திப் பெண்கள்தான் நடிக்கிறார்கள். மலையாளத்தில் கேரளப் பெண்கள்தான் நடிக்கிறார்கள். ஆனால் தமிழில் மட்டும் தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது இல்லை.
"ரெஜினா, சமந்தா இரண்டு பேரும் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். ஆனால் ஆரம்பத்தில் அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
"தெலுங்கில் முன்னணி நாயகியான பிறகுதான் கோலிவுட் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது.
"தன்ஷிகா, ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நன்றாகத் தமிழ் பேசும் நடிகைகளாக இருந்தும் அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்்படி நல்ல படங்கள் அமையவில்லை.
"பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனு க்ரீத்தி வாஸ் திருச்சிப் பெண். மிஸ் இந்தியா பட்டம் வாங்கியதற்குப் பிறகு தான் அனு க்ரீத்தி யார் என்று நமக்குத் தெரிய வந்தது.
"இந்த மாதிரி அனு க்ரீத்திகள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மீறி, நம்ம பெண்கள் நடிக்க வந்தால் அவர்களை மதிக்கமாட்டார்கள். அவர்களுக்கு சரியான உணவும் கொடுப்பது இல்லை. பாம்பே பெண்களுக்குக் கிடைக்கும் மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாகத்தான் கிடைக்கிறது.
"வடநாட்டுப் பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும் கோலிவுட் திரைத்துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பெண்களைச் சரியாகப் பார்த்துக்கொள்ளத் தெரியவில்லை என்கிற வருத்தம் எனக்குள் நிறையவே இருக்கிறது.
"நான் எனக்கு நேர்ந்ததை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு பேசவில்லை. தமிழ் நடிகைகள் எல்லாருக்குமே இதே நிலைமைதான்.
"கதை சார்ந்த படங்களுக்கு நாம் யதார்த்தமாக இருந்தால் போதும். அழகு முக்கியமில்லை. அதுவே வணிக ரீதியான படங்களுக்கு நாம் அழகாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்ம ஊர் மக்கள் 'மீம்ஸ்' போட்டு நம்மைக் கிண்டல் செய்வார்கள்.
"நம்ம ஊரு பெண்கள் அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு, ஓர் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து பெண்களுக்கான பிரச்சினை
களைத் தீர்த்துவைத்தால் நான் மகிழ்வேன்.
"அந்த அமைப்பிற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்," என்று வருத்தத்
துடன் கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவருடைய இந்த வேண்டுகோள் தமிழ்ப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் காதுகளில் விழுமா என்பது சந்தேகம்தான். விழுந்தாலும் தெரியாததுபோல் இருந்துவிடுவார்கள்.
தமிழ்ப் பெண்
களைத்தான் எங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யவேண்டும் என்று நடிகர்கள் கூறினால் அதைக் கட்டாயம் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தட்டமாட்டார்கள் என்கின்றனர் தமிழ் நடிகைகள். ஆனால் இதை நடைமுறைப்
படுத்தப்போவது யார் என்பதுதான் தற்போதைய கேள்விக்குறியாக
உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

