மஞ்சு வாரியர் புகாரால் பரபரப்பு

மஞ்சு வாரியர் புகாரால் பரபரப்பு

1 mins read
6b276134-1304-4095-89b8-ed08a04bc440
மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக 'அசுரன்' பட நாயகி மஞ்சு வாரியர் போலிசில் புகார் அளித்துள்ளார். படம்: ஊடகம் -

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக 'அசுரன்' பட நாயகி மஞ்சு வாரியர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீகுமார் மேனனால் தனது உயிருக்கும் ஆபத்து என்று அவர் புகாரில் குறிப்பிட்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

ஸ்ரீகுமார் இயக்கிய விளம்பரப் படங்களில் நடித்தபோது அவர் தன்னை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்கிறார் மஞ்சு. ஆனால் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ஸ்ரீகுமார், கடந்த கால உண்மைகளை மஞ்சு மறந்துவிட்டுப் பேசுவதாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.