காஷ்மீரைச் சேர்ந்த தம்மால் நாட்டின் தென்கோடிக்கு வந்து சேர்ந்து பிரபல திரைப்பட நடிகையாக மாற முடிந்தது இன்றுவரை தமக்கே ஆச்சரியமாக உள்ளது என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
'நேர்கொண்ட பார்வை'க்குப் பிறகு தமிழ் ரசிகர்களுக்கு வேண்டப்பட்ட நாயகியாகி விட்ட அவரது அண்மைய தோற்றம் அனைவரையும் கவரும்படி உள்ளது.
"உடல் இளைத்து, அளவான ஒப்பனையுடன் இருப்பதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது," என்று கூறுபவர், அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட, ஏராளமானோர் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

