தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் விஜய் நடித்த 'பிகில்' படத்தின் சிறப்புக்காட்சி நள்ளிரவில் வெளியாகாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலிசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். திரையரங்குகளில் இன்று வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் சிறப்புக்காட்சிக்குத் தமிழக அரசு கடைசி நிமிடத்தில் அனுமதி அளித்தது.
அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டதால், நள்ளிரவு முதலே தமிழகமெங்கும் உள்ள திரையரங்கு வாசல்களில் விஜய் ரசிகர்கள் திரண்டு ஆவலில் கூச்சலிட்டு வந்தனர். சில தியேட்டர்களில் ஒரு மணி நேரம் தாமதமாக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. கிருஷ்ணகிரியில் மட்டும் 'பிகில்' சிறப்புக்காட்சி நள்ளிரவு வரை வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து திரையங்குகளைச் சுற்றியுள்ள இடங்களில் அமளியை ஏற்படுத்தினர்.

