மயில்சாமியின் மகன் அன்பு நடித்திருக்கும் படம் 'அல்டி'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவில் பாக்யராஜ், விஜய் சேதுபதி, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய நடிகர் மயில்சாமி, "விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி. எம்.ஜி.ஆர். யாருக்காவது கஷ்டம் என்றால் மற்றவர்களுக்குத் தெரியாமல் உடனே உதவி செய்வார். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்வார். விஜய் சேதுபதியும் அதைப்போன்ற மனம் கொண்டவர்," என்று பாராட்டிப் பேசினார்.
மயில்சாமி: எம்.ஜி.ஆர்.போல விஜய் சேதுபதி
1 mins read
-

