'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் நாயகியானார் ராஷி கன்னா. இவர் இரண்டு நாயகிகள் நடிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் அடுத்து வரும் படம் 'சங்கத் தமிழன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.
மற்றவர்கள் இரண்டு நாயகிகள் நடிக்கும் படங்களில் நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து இரண்டு நாயகிகள் உள்ள படங்களில் நடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பல நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் என் முதல் படமான 'இமைக்கா நொடிகள்'கூட அதுபோன்ற படம்தான்.
"ஒரு கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பேனே தவிர, எத்தனை பேர் நடிக்கிறார்கள் என்று யோசிக்க மாட்டேன். 'சங்கத்தமிழன்' படத்தில் கமாலினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
"விஜய் படத்தில் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவு. கண்டிப்பாக அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறேன்," என்று கூறினார்.

