நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் 'களத்தில் சந்திப்போம்'. என்.ராஜசேகர் இயக்குகிறார். இதில் ஜீவா, அருள்நிதி முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மஞ்சிமா மோகன், ப்ரியா பவனி சங்கர் ஆகியோர் கதாநாயகிகள். சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற நகரங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படம் விரைவில் வெளியீடு காணும் எனக் கூறப்படுகிறது.
நட்பைச் சொல்லும் 'களத்தில் சந்திப்போம்'
1 mins read
-

