தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் தாம் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி.
தற்போதைக்குத் தமிழ் உட்பட எந்தத் தென்னிந்திய மொழியிலும் தாம் நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஜான்வியின் தந்தை போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் படம் 'வலிமை'. அதில் அஜித் நாயகனாக நடிக்கிறார்.
மேலும் 'பிங்க்' இந்திப் படத்தின் தெலுங்கு மறுபதிப்பையும் போனிகபூர் தயாரிக்கிறார். இரு படங்களில் ஏதேனும் ஒன்றில் ஜான்வி நடிப்பார் எனக் கூறப்பட்டது.
ஆனால், தற்போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் ஜான்வி.

