'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து கதிர் நாயகனாக நடிக்கும் படம் 'ஜடா'. விக்னேஷ் ராஜ கோபால் தயாரிக்கும் இப்படத்தை குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காற்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'பிகில்' படத்தில் விஜய் தம்பியாக நடித்திருந்தார் கதிர். தற்போது 'ஜடா'வும் காற்பந்தாட்டத்தை மையமாக வைத்துதான் உருவாகி உள்ளதாம். இதில் கதிர் ஜோடியாக ரோஷிணி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சமுத்திரகனி, ஏ.பி. ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் கதிர்.
'ஜடா' வெற்றிபெறும் என உறுதியாக நம்பும் கதாநாயகன்
1 mins read
-

