சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'ஆக்ஷன்'. இதில் விஷாலும் தமன்னாவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
ஹிப் ஆப் ஆதி தமிழா இசையமைத்துள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்குமாம்.
சுந்தர். சி இயக்கத்தில் கடந்த ஆண்டு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வெளியானது.
இதையடுத்து விஷாலுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக அறிவித்தார். இருவரும் 'ஆம்பள', 'மதகஜ ராஜா' படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.
கடந்த மாதம் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தீபாவளியை ஒட்டி மேலும் ஒரு முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 'ஆக்ஷன்' நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"சுந்தர். சி கதை சொல்லும் விதம் எல்லோருக்குமே பிடிக்கும். கொஞ்சம்கூட தொய்வில்லாத திரைக்கதையை அமைப்பதில் அவர் கெட்டிக்காரர். அதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். அவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்," என்கிறார் விஷால்.
'ஆக்ஷன்' படத்தின் பெரும்பா லான காட்சிகளைத் துருக்கியில் படமாக்கி உள்ளனர். பாடல் காட்சிகளும் இதில் அடங்குமாம். படத்தில் தமன்னாவின் கவர்ச்சி ரசிகர்களைக் கிறங்கடிக்குமாம்.

