அன்பானவரைத் திருமணம் செய்ய விரும்புகிறார் காஜல்

அன்பானவரைத் திருமணம் செய்ய விரும்புகிறார் காஜல்

1 mins read
f219aa32-1e82-4aa9-b553-047a5bc1039f
-

கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவரே தமக்குக் கணவராக முடியும் என்கிறார் காஜல் அகர்வால்.

மேலும் தமது வருங்கால கணவர் அனைவரிடமும் அன்பு பாராட்டக் கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

34 வயதான காஜல் அகர்வால், தற்போது 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்து முடித்துள்ள நிலையில், அவருக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வந்துள்ளது.

"நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருபவருக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதால், வருங்கால கணவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும்.

"என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். அக்கறையோடு என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரைத் தான் நான் மணப்பேன்," என்கிறார் காஜல் அகர்வால்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை வைத்து 'பாரிஸ் பாரிஸ்' உருவாகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து 'இந்தியன்' 2ஆம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார் காஜல்.