விவசாயத்தின் மேன்மையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது 'தவம்'

விவசாயத்தின் மேன்மையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது 'தவம்'

1 mins read
2572bff3-d3e3-4541-ba99-620ef6626b65
-

இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'தவம்'. இயக்குநர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி, நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளனர். மேலும், அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். விவசாயத்தைக் காத்து, எதிர்கால சந்ததியினருக்காக இந்தப் பூமியை வளமாக வைத்திருக்க என்ன வழி என்பது குறித்து இப்படம் விவரிக்கும் என இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.