'தளபதி 64' படத்தில் ஆண்ட்ரியா

'தளபதி 64' படத்தில் ஆண்ட்ரியா

1 mins read
0082ed2b-734b-4473-b9f4-fbc9b9362e23
-

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது தெரியும். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளார் என்பது புதுத் தகவல். இதை படத்தின் தயாரிப்புத் தரப்பு உறுதி செய்துள்ளது. 'தளபதி 64' படத்தில் விஜய்யுடன் வில்லனாக மோத உள்ளார் விஜய் சேதுபதி. மாளவிகா மோகன் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக லோகேஷ் கனகராஜும் கூறியுள்ளார். "ஆண்ட்ரியாவின் வேடம் குறித்தும், படம் குறித்தும் எந்த தகவலையும் தற்போது தெரிவிக்க இயலாது. படப்பிடிப்பைத் துவங்கிவிட்டோம். ஏற்கெனவே ஒப்பந்தமானவர்களை வைத்து காட்சிகளை எடுத்து வருகிறோம் என்பதை மட்டுமே தற்போது தெரிவிக்க இயலும். இதர முக்கியமான விவரங்களை மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். அது வரை காத்திருங்கள்," என்கிறார் லோகேஷ்.