தங்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையாக உருவாகிறது 'பாப்பிலோன்'

தங்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையாக உருவாகிறது 'பாப்பிலோன்'

1 mins read
c8276b6a-cf73-4d10-8cc6-4abc343f756b
-

ஆறுராஜா தயாரித்துள்ள படம் 'பாப்பிலோன்'. படத்தின் நாயகனும் இவர்தான். ஸ்வேதா ஜோயல் நாயகியாக நடித்துள்ளார். 'பாப்பி லோன்' என்றால் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். தந்தை இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் நாயகன். எதிர்பாராமல் அவரது தங்கை தொடர்பான ஒரு காணொளி கயவர்களின் கையில் சிக்குகிறது. அதை வைத்து மிரட்டப்படும் தங்கை ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார். இதையடுத்து தங்கைக்கு சுயநினைவு திரும்பு கிறதா? வில்லன்களை நாயகன் பழிவாங்குகிறாரா? என்பது மீதிக் கதை.