உற்சாகத்தில் ஷ்ருதி ஹாசன்

உற்சாகத்தில் ஷ்ருதி ஹாசன்

1 mins read
8c7fc53b-2326-4ce4-80d5-31a6ba5f402d
-

தமிழில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஷ்ருதிஹாசனுக்குத் தெலுங்கில் இன்னமும் வரவேற்பு உள்ளது. விஜய் நடித்து தமிழில் வெற்றி பெற்ற 'தெறி'யைத் தெலுங்கில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில் ரவி தேஜா நாயகனாக நடிக்கிறார். இதில் ஷ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாராம். தமிழ்ப் பதிப்பில் ஏமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ருதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு நாயகியாக நடிப்பது யார் என்பது தெரியவில்லை. பலத்த போட்டிக்கு மத்தியில் இந்த வாய்ப்பு தேடி வந்திருப்பது ஷ்ருதிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.