நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'

நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'

1 mins read
7a91fca9-cf90-4ebd-bddc-ad8b982da4bb
-

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல. ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளால் இப்படத்தின் வெளியீடு தாமதமானது. இந்நிலையில் எதிர்வரும் 29ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தை 'வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்' சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாவதால் கோடம்பாக்கத்தில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.