மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றுகிறார் அமலா. இது சர்வானந்த் நாயகனாக நடிக்கும் படம். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. ரீத்து வர்மா நாயகியாக நடிக்கிறார்.
இதில் அமலா முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதையை முழுமையாகக் கேட்டு, தனது கதாபாத்திரத்தின் தன்மையையும் நன்கு அறிந்த பிறகே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
தொடர்ந்து படங்களில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் அமலா.
எனினும் இவர் தொடர்ந்து நடிப்பதற்கு கணவர் நாகார்ஜுனா அனுமதி அளித்துள்ளாராம்.
முன்னதாக 'மனம்' என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமலா.
மனதுக்குப் பிடித்தமான கதை, கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பது குறித்து யோசிப்பதாகச் சொல்கிறார்.
இதற்கிடையே இவரது மருமகள் சமந்தாவும் கூட மாமியார் தன் படத்தில் நடித்தால் உற்சாகமாக இருக்கும் என்று கூறுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

