சின்னத்திரை நந்தினிக்கு திருமணம்

சின்னத்திரை நந்தினிக்கு திருமணம்

1 mins read
fe5f710f-3d84-45dc-a616-f1f2d76d5ff2
நடிகை நந்தினி சக நடிகர் யோகேஸ்வரனைத் திருமணம் செய்ய உள்ளார். படம்: ஊடகம் -

நடிகை நந்தினி சக நடிகர் யோகேஸ்வரனைத் திருமணம் செய்ய உள்ளார். 'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சித் தொடரில் 'மைனா' கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நந்தினி. இதையடுத்து 'வெண்ணிலா கபடிக்குழு', 'வம்சம்' உள்ளிட்டத் தொடர்களில் நடித்தவர். பிறகு திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கினார். அண்மையில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை'யிலும் நந்தினியைப் பார்க்க முடியும். இவருக்கும் கார்த்திகேயன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமா னது. எனினும் சில பிரச்சினைகளால் கார்த்திகேயன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில் நடிகர் யோகேஸ்வரனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் நந்தினி. இத்தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.