ஓவியக் கலைஞராக அனுஷ்கா

ஓவியக் கலைஞராக அனுஷ்கா

1 mins read
655c290b-6cba-463c-8afd-b53c0e3d26f5
-

'நிசப்தம்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இன்று வெளியாக உள்ளது.

இதில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாலிவுட் கலைஞர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார்களாம்.

4 இந்தியர்களுக்கும், அமெரிக்கக் காவல்துறைக்கும் இடையே நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதையாம்.

குற்றப் பின்னணியில் திகில் படமாக உருவாகின்றது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் ஓவியக் கலைஞராக நடித்துள்ளார் அனுஷ்கா.

அதைவிட முக்கியமான, சுவாரசியமான தகவல் என்னவெனில், தலைப்புக்கேற்ப வசனங்கள் இல்லாமல் உருவாகிறதாம் இந்தப் படம்.