விரதம் கடைப்பிடிக்கும் சிம்பு

விரதம் கடைப்பிடிக்கும் சிம்பு

1 mins read
66093e23-9016-4e99-ad81-5c97f8301a7f
-

'மாநாடு' படத்தில் நடிப்ப தற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம் சிம்பு.

இதையடுத்து அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல மாலை போடுவதாகக் கூறப்படுகிறது.

'மாநாடு' என்ற தலைப்பில் சிம்பு நடிக்க வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், சிம்பு தரப்பில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாகத் தாமதமானது. இதையடுத்து அப்படத்தைக் கைவிடுவதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் சபரிமலை செல்ல, மாலை போட்டு விரதம் இருக்கப் போகிறாராம் சிம்பு. அப்படியே 'மாநாடு' படத்தின் பணிகளையும் அவர் துவங்க உள்ளார். கடைசியாக கடந்த 1992ஆம் ஆண்டு 'எங்க வீட்டு வேலன்' படத்துக்காக மாலை போட்டார் சிம்பு.