விஜய்சேதுபதிக்கு ஜோடியான மேகா

விஜய்சேதுபதிக்கு ஜோடியான மேகா

1 mins read
ec215b46-3561-43a6-9d88-16ab55975bd1
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தலைப்பிடப்பட்ட படத்தில் விஜய சேதுபதியுடன் இணைந்து நடிக்க மேகா ஆகா‌ஷ் ஒப்பந்தமாகியுள்ளார். படம்: ஊடகம் -

மெல்ல, அதே சமயம் சீராக இருக்கிறது கோடம்பாக்கத்தில் மேகா ஆகாஷின் வளர்ச்சி.

முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர உள்ளார். படத்துக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

வெங்கட கிருஷ்ண ரோகந்த் என்ற அறிமுக இயக்குநரின் கைவண்ணத்தில் படம் உருவாகிறது. இவர் எஸ்.பி. ஜனநாதனின் சீடராம்.

படத்தின் தலைப்பைத் தேர்வு செய்ததே விஜய் சேதுபதிதான். நாயகியாக நடிக்க அமலா பாலை அணுகியுள்ளனர். ஆனால் சில காரணங்களால் அந்த முயற்சி கைகூடவில்லை. இதையடுத்தே மேகா இணைந்துள்ளார். இது இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்படும் படம். மூன்று இசையமைப்பாளர்கள் கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர்.