இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னரே அசத்திவரும் பாடல்

அட்டகத்தி தினேஷ்-கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகவுள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிகுண்டு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை. 
நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழுவினர் அறிவித் துள்ளனர். இந்நிலையில், இந்த இசை வெளியீட்டுக்கு முன்னரே கடந்த நவம்பர் 4ஆம் தேதி படத்தின் ‘மாவுலியோ! மாவுலி...!’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பல பிரபலமான இசை ஆல்பங்களை வெளியிட்ட தென்மா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.