‘நான் தனிமையில்தான் வாழ்கிறேன்’

கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் ‘பாகுபலி’ வில்லன் ராணாவுடன் அண்மைக்காலமாக இவர் கைகோத்து சுற்றுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து ரகுல் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என்னுடன் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என அனைவருடனும் நான் ஒரே மாதிரியாக நட்புடன் மட்டுமே பழகுகிறேன். 

“ராணாவுடன்  சேர்ந்து ஒரு போதும் நான் சுற்றியதில்லை. நான் எப்போதும்போலவே இப்போதும் தனிமையில்தான் வாழ்ந்து வருகிறேன். 

“ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் வதந்தியே தவிர அதில் துளியும் உண்மையில்லை,” எனத் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். 

இவர் இப்போது புதிய இந்திப் படம் ஒன்றில் அர்ஜுன் கபூரின் காதலியாக நடிக்க உள்ளார். 

தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து இந்தியில் கால் பதித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், இந்த ஆண்டில் இரு படங்களை நடித்து முடித்துள்ள நிலையில், மூன்றாவது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்த மாகியுள்ளார். 

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் காதலியாக நடிக்க உள்ள ரகுலின், பெயர் வைக்கப்படாத படத்தை காஷ்வி நாயர் இயக்குகிறார்.

படத்திலுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறி விக்கப்படும் எனத் தெரிகிறது. 

இதனிடையே படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க வுள்ளது. 

இந்நிலையில் காதலுடன் தன்னைப் பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் தோள்களைப் பின்னாலிருந்து அணைத்த வாறு அர்ஜுன் கபூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

1761ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை அடிப்படையாகக் கொண்டு அர்ஜுன் கபூர் நடித்துள்ள ‘பானிபட்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. 

ரகுல் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள ‘மார்ஜவான்’ என்ற படம் இன்று நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது.