‘சண்டைக்காட்சியில் கண்படும் எங்களது ஜோடிப் பொருத்தம்’

பொதுவாக காதல் காட்சியில் தான் நாயகன் நாயகிகளின் ஜோடிப்பொருத்தம் சிறப்பாக அமையும். ஆனால் ‘ஆக்‌ஷன்’ படத்தில் எனக்கும் தமன்னாவுக்குமான சண்டைக்காட்சிகள் கண்படும் அளவுக்கு பொருத்தமாகவும் சிறப்பாகவும் வந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். 

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ‘ஆக்‌ஷன்’ படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசிய விஷால் கூறுகையில், “அண்மைக் காலமாக நீதிமன்ற வாசலில்கூட நின்றிருக்கிறேன். ஆனால், உங்கள் முன்பு நிற்பதை பெருமையாக உணர்கிறேன்.

“எனது சினிமா வாழ்க்கையில் எனக்கு அதிக காயங்கள் பட்ட படமும் அதிக சண்டைக் காட்சிகள் கொண்ட படமுமாக நான் பார்ப்பது இந்த ‘ஆக்‌ஷன்’ படத்தைத்தான். 

“ஒரு கட்டத்தில் என்னுடைய சாவைகூட நான் கண்ணால் பார்த்தேன். 

“படப்பிடிப்பின்போது எனக்கு கை, காலில் அடிபட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்காமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால், அதையும் மீறி வெற்றி கரமாக இந்தப் படத்தை முடித்துக்கொடுத்துள்ளேன்.

“ஆனால், அடிபட்டபோது எனக்கு ‘டூப்’ போட்டு சண்டைக்காட்சிகளைப் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். அதையும் மீறி நான் அந்தக் காட்சிகளில் நடித்துள்ளேன்.

“சண்டைக் காட்சியில் தமன்னா வும் ‘டூப்’ போடாமலே நடித்துள்ளார்.

“யாரேனும் உதவி இயக்குநராக பணியாற்ற விரும்பினால் சுந்தர் சியிடம் பணியாற்றுங்கள். ஏனெ னில் ஒரு சாதாரண இடத்தையே பிரமிக்க வைக்கக்கூடிய இடமாக மாற்ற அவரால் மட்டுமே முடியும்,”   என்று விஷால் தெரிவித்துள்ளார்.