கவர்ச்சி கதவுகளைத் திறந்துவிட்ட அதிதி

கவர்ச்சி கதவுகளைத் திறந்துவிட்ட அதிதி

1 mins read
e48496d5-bda3-4a9c-a087-04baee72fe37
-

அதிதி பாலனுக்கு போதுமான அளவுக்கு படவாய்ப்புகள் வராததால் மற்ற சில நடிகைகளைப் போலவே கவர்ச்சியாக நடிப்பதற்கு தானும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

'அருவி' படத்தில் மிகப்பிரமாதமாக நடித்திருந்தார் நடிகை அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு பாராட்டுகளும் குவிந்தன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால், நடித்தால் நல்ல கதையம்சம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் எனக் கூறி, பல பட வாய்ப்புகளையும் தட்டிவிட்ட அதிதி பாலனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் வராமல் போயின.

தற்போது, சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'ஜாக் அண்ட் ஜில்' படத்தில் அதிதி நடித்துவருகிறார்.