ஜெயம் ரவி, அருண் விஜய் வெளியீடு செய்த ‘காளிதாஸ்’ முன்னோட்டம்

போலிஸ் கதாபாத்திரத்தில் ஒரு படத்திலேனும் காக்கி சட்டை போட்டு நடித்துவிட வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் பெரும் கனவாக இருக்கும். அவ்வகையில் பரத் முதன்முதலாக போலிசாக  நடித்துவரும் படம்தான் ‘காளிதாஸ்’. இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நேற்று          9ஆம் தேதி நடிகர் ஜெயம் ரவியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்து வெளியிட்டனர். இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான பரத், அதன்பின்னர், ‘செல்லமே’, ‘காதல்’, ‘பட்டியல்’, ‘என் மகன்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘கண்டேன் காதலை’, ‘வானம்’, ‘பொட்டு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் மலையாளம், இந்தி என மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். ‘காளிதாஸ்’ படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், ஆன் ஷீட்டல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Loading...
Load next