ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை

1 mins read
77c92126-a44a-40b6-ae6d-a24c576be768
தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம் -

திரைக் கலைஞர்களின் பணி குறித்து விமர்சிக்கும் உரிமை பிறர்க்கு இருக்கலாம். ஆனால், கலைஞனின் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் இளம் நாயகி ராஷ்மிகா.

அண்மைய பேட்டி ஒன்றில் நடிகர், நடிகையராக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படங்களை வைத்து சிலர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்திருந்தனர். இதுதான் அவரை உசுப்பேற்றி உள்ளது.

"இப்படிச் செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என்பது தெரியவில்லை. பிரபலம் என்பதாலேயே எங்களை இலக்காக்க முடியாது. இவ்வாறு செய்வது மனதை வெகுவாகக் காயப்படுத்துகிறது," என்கிறார் ராஷ்மிகா.