மன்னிப்பு கோரிய விஷால்

படப்பிடிப்பின்போது சக நடிகையை அடிக்க நேர்ந்ததற்காக மன்னிப்புக் கோரியுள்ளார் நடிகர் விஷால். 

சுந்தர் சி. இயக்கத்தில் இவரும் தமன்னாவும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆக்‌ஷன்’. 15ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. 

இதில் அகன்ஷா புரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இது அதிரடிச் சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகி உருவாகிறது. மிக ஆபத்தான அக்காட்சிகளில் நடித்தபோது மரணத்தைத் தன் கண் முன்னே பார்த்ததாக விஷால் கூறியுள்ளார். 

“இதுவரை நான் பெண்களைத் தாக்குவது போன்ற காட்சிகளில் நடித்ததில்லை. ஆனால், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான சண்டைக் காட்சிகளுக்காக அகன்ஷா புரியை பலமுறை அடிக்க நேர்ந்தது.  

“இதற்காக அவரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் விஷால்.