தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதலிக்கும் இளம் கதாநாயகி

1 mins read
b13bd3b8-7652-4457-8717-8652d74a00bf
-

நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதல் வயப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், அண்மையில் ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றினார்.

இதுகுறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, கவர்ச்சியும் நடிப்பின் ஓர் அங்கம் என்று விளக்கமளித்து அசரவைத்தார். இந்நிலையில் மீண்டும் இவரது கவர்ச்சிப் படங்கள் வெளியாகி உள்ளன.

அவற்றில் நாகரிக உடையில் இளையர் ஒருவருடன் காட்சி தருகிறார் அனுபமா. அந்த இளைஞர் யார்? என்ன செய்கிறார்? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

ஆனால், அனுபமா இவரைத்தான் காதலிக்கிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.