கண்ணியம் தேவை: நிவேதா கோபம்

அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். 

அவரிடம் ரசிகர்கள் சிலர் எக்குத்தப்பான கேள்விகளைக் கேட்டதே இந்த வருத்தத்திற்கான காரணம். இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் சற்று கண்ணியம், மரியாதையைப் பேணவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

“உங்களுக்கு எப்போது திருமணம்? காதலர் இருக்கிறாரா? என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா? கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா?என்றெல்லாம் கேட்கப்பட்ட வினோதமான கேள்விகளை நான்  புறக்கணித்து விட்டேன். “முதலில் சக மனிதரிடம் பேசுகிறீர்கள் என்பதை உணருங்கள்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் நிவேதா.