தர்காவில் காஜல் பிரார்த்தனை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார்.

நடிகர், நடிகைகள் பலரும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.

நடிகை நயன்தாராவும் அண்மையில் இந்த தர்காவுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

தற்போது நடிகை காஜல் அகர்வாலும் அஜ்மீர் தர்காவுக்குச் சென்று சிறப்புத் தொழுகையுடன் தனது நேர்த்திக் கடனைச் செலுத்தி உள்ளார்.

தனது திருமணத்திற்கு ஏற்ற பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்து விட்டதால்தான் காஜல் இந்த நேர்த்திக் கடனைச் செய்திருப்பதாக வலைவாசிகள் கூறிவருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத் தளங்களில் பரவிவருகின்றன.

‘கால் சென்டர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் காஜல், கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்காக வர்மக் கலைகளையும் கற்றுவருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு 34 வயதாவதால் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் இதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தைத் தவிர வேறு எந்த ஒரு படத்திலும் காஜல் ஒப்பந்தம் ஆகாமல் இருந்துவரும் நிலையில், திருமணத்தை செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகலாம் என்ற முடிவில் அவர் இருந்து வருகிறார்.

முன்னதாக, தனது வருங்காலக் கணவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வெளியிட்டார் காஜல்.

அதன்பின்னர் அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்துவிட்டதாகவும் தொழிலதிபர் ஒருவர் காஜலை மணப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

பொதுவாக ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் படிப்படியாக அவரது வாய்ப்புகள் குறைந்துவிடும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகை ஓரங்கட்டப்பட்டுவிடுவார்.

உதாரணமாக தேவயானி, சிம்ரன், ஊர்வசி, ராதிகா ஆகியோரை குறிப்பிடலாம். ஜோதிகா திருமணத்திற்குப் பிறகும் கூட நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக நாயகி்களை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்கிறார்.

தமன்னா, அனுஷ்கா, திரிஷா, மடோனா செபாஸ்டியன், நயன்தாரா என்று முக்கிய நடிகைகள் இன்னும் திருமணம்செய்து கொள்ளாமல் சினிமாவில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

காஜல் நடிக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கால் செண்டர்’, ‘மும்பை சகா’, ‘இந்தியன் 2’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!