நிவேதா: நான் விஜய் ரசிகை

நவம்பர் மாதம் வந்தாலே நிவேதா பெத்துராஜின் முகத்தில் எப்போதும் புன்னகையைக் காண முடிகிறது. காரணம் நவம்பரில்தான் அவரது பிறந்தநாள் வருகிறது.

இதை முன்னிட்டு ஏகப்பட்ட பிறந்தநாள் பரிசுகள் தேடி வருமாம். இந்தாண்டு பிறந்தநாள் பரிசாக தாம் நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ படம் வெளியாவதாகச் சொல்கிறார்.

மேலும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம் தவிர, தமிழில் ‘ஜெகஜால கில்லாடி’, ‘பார்ட்டி’ ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

நிவேதா பிறந்தது மதுரையில் என்றால், சிறு வயதில் தூத்துக்குடியில் வசித்தாராம். அதன்பிறகு பெற்றோர் துபாய்க்குச் சென்றதால் இவரும் அங்கு பறந்துவிட்டார். இப்போதும் அவர்கள் துபாயில்தான் உள்ளனர். ஓய்வு கிடைத்தால் நிவேதாவும் அங்கு செல்கிறார்.

“மதுரையில் இன்றளவும் சில உறவினர்கள் வசிக்கின்றனர். படப்பிடிப்புக்குச் செல்லும்போது அவர்களை எல்லாம் சந்திப்பேன்.

“மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என்னை துபாயில் நிச்சயம் பார்க்க முடியும்.

“ஒருவேளை நான் அங்கு போகவில்லை என்றால், பெற்றோர் என்னைத் தேடி வந்துவிடுவார்கள்.

“துபாயிலும் எனக்கு நண்ப ர்கள் அதிகம். மனசுக்குப் பிடித்தமான விஷயங்கள் பலவும் அங்கு உள்ளன.

“எனவே, என்னை மதுரைப் பெண், துபாய்ப் பெண் என்று இரண்டு விதமாகவும் குறிப்பிடலாம்,” என்று சிரிக்கிறார் நிவேதா.

சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் நிறைய சேட்டைகள் செய்வாராம். எப்போதும் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருப்பாராம்.

“சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் நான் சரியான வாலு. 10ஆம் வகுப்பு படித்தபோது என்னுடைய சேட்டைகளைத் தாங்க முடியாமல் பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. அந்தச் சமயம் ஒரு பையன் என்னை அதிகமாகக் கேலி செய்தான். அதைத் தாங்கமுடியாமல் அவனை அடித்துத் துவைத்து விட்டேன். அது பெரிய பிரச்சினையாக மாறி பள்ளி நிர்வாகம் பெற்றோரை அழைத்துப் பேசியது.

“என்னைப் பள்ளியை விட்டு நீக்குவதாகத் தலைமை ஆசிரியர் சொன்னபோது அம்மா கண்கலங்கி விட்டார். எனக்கும் அவரது அழுகையைப் பார்க்க வேதனையாக இருந்தது. அதனால் 11, 12ஆம் வகுப்புகளில் எனது வால்தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு சமர்த்துப் பெண்ணாக மாறினேன்,” என்று சொல்லும் நிவேதாவுக்குச் செல்லப் பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியமாம்.

மிருகங்களின் நலம், அவற்றின் பராமரிப்பு, வளர்ப்பு குறித்துப் பேசச் சொன்னால் மணிக்கணக்கில் பேசுவேன் என்கிறார்.

துபாயில் இரண்டு, சென்னையில் ஒன்று என மூன்று பூனைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார். சென்னை பூனைக்கு ‘நண்டு முருகன்’ என்று பெயர் வைத்துள்ளாராம்.

“பூனைகள் பார்க்க அழகாக இருப்பதால் நமக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். வீட்டில் எங்கு திரும்பினாலும் பூனைகளாக இருக்கும் வகையில் என் வீட்டை மாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது,” என்கிறார் நிவேதா.

உங்களுடைய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

“அவர் மிடுக்கானவராக, ரசனை உள்ளவராக இருக்க வேண்டும். எனக்குப் பழைய பாடல்கள் ரொம்பப்பிடிக்கும். அவருக்கும் பிடித்திருக்க வேண்டும்.

“மெல்லிய விளக்கொளி, சாக்லேட்டுகள் ஆகியவையும் எனக்குப் பிடித்தமானவை. மிகச் சுருக்கமாகச் சொன்னால் நடிகர் விஜய் மாதிரி இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு,” என்கிறார் நிவேதா.

இவரது குடும்பத்தாரும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களாம். அவர் நடித்த படங்கள் வெளியாகும் போது முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்கத் துடிப்பார்களாம்.

“சிறு வயது முதலே விஜய் நடித்த படங்களை ஒன்று விடாமல் பார்த்து வருகிறேன். வீட்டில் என் அறையில் எங்கு திரும்பினாலும் அவரது புகைப்படம்தான் இருக்கும்.

“சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதும் அத்தகைய ஆசைகளில் ஒன்று. அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மறுக்கமாட்டேன்,” என்று சொல்லும் நிவேதா, தமிழில் தற்போது 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!