இயக்குநர்களின் பாராட்டை பெற்ற ‘வி-1’

‘வி-1’ என்ற பெயரில் உருவாகியுள்ள புதுப்படத்தை இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன்.

இவர் ‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தவர். ‘வி-1’ மூலம் இயக்குநராகியுள்ளார்.

இதில் புதுமுகங்கள் அதிகம் நடித்துள்ளனர். புலனாய்வும் திகிலும் கலந்து உருவாகியுள்ளது. படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பிரம்மா, பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டி உள்ளனராம். தமிழ்ச் சினிமாவில் திகில் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக சொல்கிறார் பாவெல் நவகீதன்.

“பிரம்மா சாருக்கு இந்தப் படத்தின் கதை முன்பே தெரியும். அவரால்தான் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படத்தைப் போட்டுக் காட்டியபோது படம் பார்த்த பிறகு பத்து நிமிடங்கள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அதன்பிறகு என்னை ஊக்கப்படுத்தும் விதமாக பல விஷயங்களைப் பேசினார்.

“வெற்றிமாறன் சார் படம் பார்க்க வந்ததும், ‘படம் பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து போய்விடுவேன். என்னைத் தவறாக நினைக்கக் கூடாது’ என்ற நிபந்தனை விதித்தார். ஆனால் முழுப் படத்தையும் பார்த்து மகிழ்ந்தார்.

“சமுத்திரகனி சார், சசிகுமார் எனப் பலரிடமும் என்னைப் பற்றி பாராட்டியதாகக் கேள்விப்பட்டேன். இதேபோல்தான் ரஞ்சித் சார் பாராட்டும் கிடைத்துள்ளது,” என்று உற்சாகத்துடன் விவரிக்கிறார் பாவெல் நவகீதன்.

படத்தின் தலைப்பான ‘வி-1’ என்பது ஒரு வீட்டின் கதவிலக்கத்தைக் குறிக்கிறதாம். அந்த வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அறிமுக நாயகன் ராம் அருண் காஷ்ட்ரோ தடயவியல் நிபுணராக வருகிறார்.

கதைப்படி அவருக்கு இருட்டைக் கண்டால் பயம். அதனாலேயே காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வேலை பார்க்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதையாம்.

“அறிமுக நாயகன் காஷ்ட்ரோ, நாங்கள் எதிர்பாராத அளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் அவர் பெரிய நடிகராக உருவாக வாய்ப்புள்ளது. இன்னொரு நாயகனாக லிஜேஷ் நடித்துள்ளார்.

“’கைதி’யைப் போல் இந்தப் படத்திலும் பாடல்களே இல்லை. படம் தொடங்கிய முதல் எட்டு நிமிடங்களுக்கு வசனமே கிடையாது. தணிக்கைக் குழுவினரும் கூட இதைக் குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டினர்.

“இயக்குநராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எனினும் ‘மெட்ராஸ்’ மூலம் நடிகனானேன். ஒரு கட்டத்தில் நடிகராக இருப்பதால் மக்களிடமிருந்து விலகத் தொடங்கி விட்டோமோ என்ற பயம் ஏற்பட்டது.

“மக்களோடு மக்களாகப் பழகும்போதுதான் நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் நமக்கு அறிமுகமாகும். எனினும் பிரம்மா அண்ணன் கூப்பிட்டு ‘குற்றம் கடிதல்’ படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு இயக்குநர்கள் ராம், வெற்றிமாறன் ஆகியோரது படைப்புகளிலும் நடிக்கும் நல்வாய்ப்பு அமைந்தது. இதனால் நடிப்பிலும் தொடர்ந்து பெயர் வாங்க விரும்புகிறேன். படங்களும் இயக்குவேன்,” என்கிறார் போவெல் நவகீதன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!