கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் 'தம்பி'. இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை நடிகர்கள், சூர்யா, மோகன்லால், நாகர்ஜுனா ஆகியோர் அண்மையில் வெளியிட்டனர். 'பாபநாசம்' இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள படம் இது. கதைப்படி கார்த்தியின் மூத்த சகோதரியாக நடித்துள்ளார் ஜோதிகா. இவர்களுக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், தம்பிக்காக அக்கா காத்திருப்பது போன்ற உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் 'தம்பி'
1 mins read
கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் 'தம்பி'. -

