ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

1 mins read
cb3784c2-7319-46ec-a6c0-1b161f842b8d
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம் -

பிரியங்கா சோப்ரா இந்திப் படம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என்பது தெரியும்.

ஆனால், அவர் 144 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார் என்பது பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்ஸைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அவர் அமெரிக்காவிலேயே குடியேறியுள்ளார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம்.

மொத்தம் 20 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 144 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டில் திரையரங்கம், மதுக்கூடம், உணவகம், கூடைப்பந்து அரங்கம், நீச்சல் குளம், 7 படுக்கை அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளதாகத் தகவல்.