கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்

1 mins read
b143542e-6fcc-402e-9eff-98a57250afb8
'ஆஹா கல்யாணம்' என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம் -

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி உடையால் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகை வாணி கபூர்.

இவர் தமிழில் வெளியான 'ஆஹா கல்யாணம்' என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தவர். பிறகு இந்திப் பக்கம் போய்விட்டார்.

இந்நிலையில் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் ராமர் பெயர் அச்சிட்ட ஆடையுடன் காட்சி தந்தார் வாணி. இது இந்து மதத்தினரின் மனதைப் புண்படுத்துவது போல் உள்ளது என்றும் கவர்ச்சிப் படத்தை வெளியிட்டு மலிவு விளம்பரம் தேட வாணி கபூர் முயற்சிப்பதாகவும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதையடுத்து அக்குறிப்பிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்றவேண்டும் என்றும் ஒருதரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.