தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமக்குத் தெலுங்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருவதாகச் சொல்கிறார் நடிகை ஷ்ருதிஹாசன்.
எனவே, தெலுங்கில் நடிப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'லாபம்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார் ஷ்ருதி. அதேபோல் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கும் 'கிராக்' மூலம் தெலுங்கிலும் இவரது மறுபிரவேசம் நிகழ உள்ளது.
"என்னைப் பொறுத்தவரை தெலுங்கு ரசிகர்களும் நல்ல ரசனை உள்ளவர்கள். அங்கிருந்துதான் எனது வெற்றிப்பயணம் தொடங்கியது. எனவே தெலுங்குத் திரையுலகமும் எனக்கு இன்னொரு வீடு போலத்தான்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.

