'விஜய் 64' புகைப்படங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு

'விஜய் 64' புகைப்படங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு

1 mins read
7632fb80-0d36-4fd8-a38b-de7062cda350
'பிகில்' படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக 'தளபதி 64'  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

'பிகில்' படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக 'தளபதி 64' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி படத்தின் கதை, தலைப்பு, விஜய்யின் கதாபாத்திரம், உள்ளிட்டவைக் குறித்து பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அதில் நடிகர் விஜய் அடையாள அட்டை அணிந்து மாணவர்களுடன் அமர்ந்திருந்தார்.

இதனால் இப்படத்தில் விஜய் ஆசிரியராக நடிக்கிறாரா அல்லது மாணவராக நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுஒருபுறமிருக்க, க லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவதாலும் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் இந்தப் படம் 'நம்மவர்' படத்தின் மறுதயாரிப்பு என்று வெளியான தகவலைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு 'டாக்டர்' என்று பெயரிப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்சினை உள்ளிட்டவற்றை இந்தப் படம் பேசுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.