விளம்பரப் படங்களில் வெற்றி பெற நிறம், தோற்றம் முக்கியம் இல்லை என்கிறார் நடிகை ரைசா வில்சன்.
விளம்பரங்களிலும் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து, ‘அலிசா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘எப்.ஐ.ஆர்’ படங்களில் ரைசா நடிப்பதாக செய்திகள் வந்தன. அதன் பிறகு அவை பற்றிய தகவல்கள் இல்லை. பிக்பாஸ் புகழ், ஒரு வெற்றிப் படம் என இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்திவிடும் என்று நினைத்த வருக்கு ஏமாற்றமே மிஞ்சி யது.
‘பியார் பிரேமா காதல்’ படத்தைப் பார்த்துவிட்டு சிலர் ரைசா கதாநாயகியாக நடிப்பதைவிட, துணை கதாபாத்திரம் அல்லது விளம்பரத்திற்கு தான் சரியானவர் என்று விமர்சித்திருந்தனர்.
இதற்கிடையே ‘ஆதித்ய வர்மா’ படம் முதலில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது அதில் ரைசா நடித்திருந்தார். பின்னர் அவரை நீக்கிவிட்டு ப்ரியா ஆனந்தை நடிக்க வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டியில், “விளம்பரங்களில் நடிக்க, சிவப்பாக இருக்க வேண்டும், ஸ்டைலாக நடந்துகொள்ள வேண்டும் எனப் பலர் நினைக்கின்றனர்.
“உலகில் பிறந்த ஒவ்வொருவருமே அழகுதான். மாடலிங் துறையில் வெற்றி பெற, முறையான பயிற்சி இருந்தாலே போதும். எவரும் அத்துறையில், வெற்றிக் கொடி நாட்டலாம்,’’ என்றார்.
இவர் கல்பலூரியில் படிக்கும் போதே விளம்பரப் படங்களில் நடித்து உள்ளார்.