ஏதாவது தவறு நடந்தால் நமக்கு கற்றுக்கொடுக்கத்தான் நடக்கிறது என்று நினைக்கும் பழக்கம் தனக்கு உள்ளதாக கூறுகிறார் சாய் பல்லவி.
பேட்டியொன்றில் இது பற்றி பேசிய அவர், “வாழ்க்கையில் நினைத்தது நடக்காமல் போனாலோ அல்லது செய்த வேலைக்கு எதிர்மறையான பலன்கள் கிடைத்தாலோ நிராசைக்கு ஆளாவது உண்டு.
“நான் அதை வேறு கோணத்தில் பார்ப்பேன். ஏதாவது நடக்க வேண்டும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
“எந்த மாதிரி பிரச்சினை வந்தாலும் அதில் இருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று சோர்ந்து போகக்கூடாது.
“படிக்கிற காலத்திலேயே எது வந்தாலும் இது நம் நல்லதுக்குத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொண்டேன்.
“அந்த பழக்கம் இப்போது சினிமா துறையில் எனக்கு உதவியாக இருக்கிறது. இங்கேயும் ஏதாவது தவறு நடந்தால் நமக்கு கற்றுக்கொடுக்கத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பேன்.
“சினிமாவில் நடிகையாக இருப்பது குறுகிய காலம்தான். நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று தெரியாது. ஆனால் நடிக்கிற காலத்தில் ஒவ்வொரு
புதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்,” என்றார்.