கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ பல்வேறு பிரச்சினைகளால் முடங்கியுள்ள நிலையில், படத்தை வரும் புத்தாண்டிலாவது வெளியிட வேண்டும் எனும் நோக்கத்து
டன் சில புதிய முயற்சிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனராம். கடந்த 2016ஆம் ஆண்டு இப்படத்தின் வேலைகள் துவங்கின. மொத்தம் ஏழு நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி பிரம்மாண்ட முறையில் படத்தை உருவாக்கியுள்ளார் கௌதம் மேனன். இதில் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். துப்பறியும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு சில பிரச்சினைகளால் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிட விக்ரம் தரப்பில் தற்போது சில முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.