தனது திருமணம் குறித்துச் சிலர் வீண் வதந்திகளைப் பரப்பி வருவதாகச் சொல்கிறார் யோகிபாபு.
தற்போது தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவரும் யோகிபாபுவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
மேலும் அவர் இளம்பெண் ஒருவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானதுடன் அப்படத்தில் இருப்பது யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த புகைப்படம் குறித்தும், திருமணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் யோகிபாபு.
“எனது திருமணம் குறித்துப் பரவி வரும் தகவல் வெறும் வதந்திதான். திருமணம் முடிவானதும் நானே அதை முறையாக அறிவிப்பேன். அதுவரை ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்கிறார் யோகி பாபு.