தாம் சிம்புவின் தீவிர ரசிகை என்று அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தன்ஷிகா. சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிகம் யோசிக்காமல் ஒப்புக் கொள்வேன் என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 'பேராண்மை' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தன்ஷிகா, 'கபாலி'க்குப் பிறகு அனைவரும் அறிந்த நடிகையாகி உள்ளார். தற்போது 'கிட்னா', 'யோகிடா', 'இருட்டு' உள்ளிட்ட படங்க ளில் நடித்து வருபவர், சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் தமது வருங்கால கணவர் நம்பிக்கைக்கு உரியவராகவும் பாசத்தை உறவுகளை மதிப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'நான் சிம்புவின் தீவிர ரசிகை'
1 mins read
தன்ஷிகா -

