இறுதிக் கட்டத்தில் அதர்வா, அனுபமா ஜோடி சேர்ந்துள்ள புதுப் படம்

இறுதிக் கட்டத்தில் அதர்வா, அனுபமா ஜோடி சேர்ந்துள்ள புதுப் படம்

1 mins read
cbbaba4e-3230-4d32-9e50-13038d5ff5ca
புதிய படமொன்றில் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ளார் அனுபவமா. பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம் -

அதர்வா, அனுபமா இணைந்து நடித்துவரும் புதுப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. '100'க்குப் பிறகு அதர்வா நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆர். கண்ணனுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் அதர்வா. குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அதர்வா முனைவர் பட்டம் பெற்ற இளைஞராகவும், அனுபமா நடன ஆசிரியராகவும் நடித்துள்ளனர். மிக விரைவில் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கு முன்னதாக படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.