ரசிகர்கள் சிலர் தம்மை ஆங்கில நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் பிக்பாஸ் புகழ் யாஷிகா.
அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாகிவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட கவர்ச்சிப் படங்களைக் கண்ட ரசிகர்கள் சிலர், ஆங்கில கவர்ச்சி் நடிகை மியா கலிபாவுடன் இவரை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.
இதுதான் யாஷிகாவை வருத்தப்பட வைத்துள்ளது.
“சம்பந்தமே இல்லாத ஒருவருடன் என்னை ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிச் செய்வது வருத்தம் அளிக்கிறது,” என்கிறார் யாஷிகா.