தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சினிமாவால் நட்பை இழந்து வருந்தும் நாயகி

1 mins read
7249ba04-03db-4475-aede-968881f00829
ரா‌ஷ்மிகா -

நடிகையான பிறகு சில நண்பர்களும் தோழிகளும் நட்பை முறித்துக் கொண்டதாகச் சொல்கிறார் ராஷ்மிகா.

தெலுங்கு ரசிகர்களைக் கிறங்கடித்து வந்த இவர், தற்போது தமிழில் கார்த்திக்குடன் இணைந்து 'சுல்தான்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவர்ச்சியாக நடித்ததால் சினிமா துறைக்கு வெளியே நிறைய சங்கடங்களை எதிர்கொண்டதாகச் சொல்கிறார்.

'கிரிக் பார்ட்டி' தெலுங்கு படத்தில் இவர் கவர்ச்சி காட்டியதை அடுத்து, அக்கம் பக்கத்து வீட்டினர் ஒரு மாதிரியாகப் பார்த்தனராம். வெறும் நடிப்புக்காகவே திரையில் அப்படிக் காட்சியளிக்க நேரிட்டது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையாம்.

"இப்படித்தான் நெருக்கமான சில நட்புகளையும் இழந்தேன். இத்தகைய மனப்போக்கைக் கண்டு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.

"ஆனால் இப்போது கொஞ்சம் பக்குவமாகிவிட்டேன். அதனால்தான் எனது வேலையில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது," என்று சொல்லும் ராஷ்மிகா, 'சுல்தான்' தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கிறார்.