நடிகர் பாலாசிங் காலமானார்

நடிகர் பாலாசிங் காலமானார்

1 mins read
05235901-d0c4-48da-acfe-da28d330a553
-

பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.

நாசர் இயக்கத்தில் உருவான 'அவதாரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாலாசிங். தொடக்க காலத்தில் மலையாளத்தில் அதிகம் நடித்தாலும் பிறகு தமிழில் கவனம் செலுத்தினார். 'இந்தியன்', 'புதுப்பேட்டை', ''ராசி' உள்ளிட்ட பல படங்களில் பாலாசிங்கின் நடிப்பு பேசப்பட்டது. அண்மையில் வெளியான 'என்ஜிகே', 'மகாமுனி' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்குக் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.