யதார்த்தமான படைப்பாக உருவாகி உள்ளது 'அடுத்த சாட்டை'

யதார்த்தமான படைப்பாக உருவாகி உள்ளது 'அடுத்த சாட்டை'

1 mins read
97a43fcd-141b-4840-8498-e6c7dd219b1b
-

அன்பழகன் இயக்கத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'அடுத்த சாட்டை'. பிரபு திலக், சமுத்திரக்கனி இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 'சாட்டை' விமர்சனம், வசூல் ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகத்தையும் அன்பழகனே இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த பலரும் 'அடுத்த சாட்டை'யில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படமும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் உருவாகி உள்ளதாம்.