‘கலாசாரம்தான் முக்கியம்’

இந்தி கலாசாரம் குறித்து தமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் அம்மொழியில் தாம் நடிக்கத் தயங்குவதற்கு இதுதான் காரணம் என்றும் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

தாம் இந்திப் படங்களை அதிகம் பார்ப்பதில்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிகர்கள் பட்டியலை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள், தனுஷ், பாபி சிம்ஹா, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி, தீபிகா படுகோன் ஆகியோருடன் விஜய் சேதுபதியும் இடம்பெற்றுள்ளார்.

இதையடுத்து இப்பட்டியலில் உள்ள முன்னணி நடிகர்களிடம் பேட்டி கண்டு அதன் தொகுப்பை வெளியிட்டுள்ளது அந்த இணையத்தளம். அந்தப் பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் சேதுபதி.

“நான் துபாயில் 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது இந்தியில் சரளமாகப் பேசுவேன். தற்போது 16 ஆண்டு இடைவெளி ஏற்பட்டதால் இந்தியில் பேச முடியவில்லை. அதேசமயம் இந்தியில் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

“என்னைப் பொறுத்தவரை மொழியைக் கற்பது எளிது. ஆனால், கலாசாரத்தைப் புரிந்துகொள்வது சுலபமல்ல,” என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் உங்களைப் பயப்பட வைக்கும், தயங்க வைக்கும் அம்சம் எதுவாக இருக்கும்? என்ற கேள்விக்கு மொழியும் கலாசாரமும் என பதிலளித்துள்ளார் சேதுபதி.

“இந்திக் கலாசாரம் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம். சவுதி அரேபியாவில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தால் அரபி மொழி கூட பெரிய தடை அல்ல, கற்கலாம். ஆனால், கலாசாரம்தான் முக்கியம். அதன் மூலம்தான் ரசிகர்களைச் சென்றடைய முடியும்.

“நான் உடல் மொழியைக் குறிப்பிடவில்லை. நான் வேறு மாதிரி சிந்திப்பேன், இந்தி கலாசாரத்தை அறிந்தவர் வேறுமாதிரியாகச் சிந்திப்பார் என்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறேன்,” என்று விஜய் சேதுபதி விவரித்துள்ளார்.

குடும்பம், பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முறை, நட்பு பாராட்டும் விதம் எனப் பல விஷயங்கள் ஒவ்வொரு கலாசாரத்துக்கும் ஏற்ப மாறுபட்டு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு நகரத்துக்கும் மாநிலத்துக்கும் என தனிப்பட்ட ஆற்றல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“அந்த ஆற்றலை அந்தந்த இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேணுவார்கள். அது நமக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் அந்தக் கலாசாரம் சார்ந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்க முடியும்,” என்று சேதுபதி கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய கலாசாரத்துடன் தம்மால் எளிதில் ஒன்றிவிட முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலாசாரங்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அதேபோல் இந்தி என்று வரும்போது அக்கலாசாரத்தைத் தெரிந்துகொள்வதும் முக்கியம். தென்னிந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை அவர்களோடு தொடர்புபடுத்திக் கொள்கின்றனர்.

“உங்களுக்கு உண்மையிலேயே சமூகம் குறித்து எல்லாம் தெரிகிறது என்றால், கலை மூலமாக அம்மக்களை எளிதில் சென்றடையலாம்,” என்று சேதுபதி தெரிவித்துள்ளார்.

தனக்குப் பிடித்த 4 நாயகர்கள் குறித்தும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சிவாஜி. எந்தவொரு கதாபாத்திரத்தையும் சர்வ சாதாரணமாக நடிப்பில் வெளிப்படுத்தியதால் அவரைப் பிடிக்குமாம்.

அடுத்த இடத்தில் கமல் உள்ளார். திறமையான நடிகராக, கதைக்கு ஏற்ப, எந்த ஒரு பாத்திரத்திலும் கமல்ஹாசனால் நடிக்க முடியும் எனப் பாராட்டியுள்ளார்.

மூன்றாவதாக மோகன்லாலைக் குறிப்பிட்டுள்ள சேதுபதி, மோகன்

லால் எளிதாக நடிக்கக்கூடியவர் என்கிறார். மேலும், எம்ஜிஆரின் புத்திசாலித்தனமான நடிப்பு மற்றும் கதை தேர்வு செய்யும் விதம் எல்லாமே தனக்கு பிடிக்கும் என்கிறார் சேதுபதி. கொசுறு: சேதுபதி நடிப்பில், ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘லாபம்’ என பல படங்கள் தயாராகி வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!