தனது மகனுக்காக நடிகை ஜெனிலியா எழுதியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகிய ஜெனிலியா, தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக உள்ளார்.
அண்மையில் தனது மூத்த மகன் ரியானின் ஐந்தாவது பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளத்தில் தாம் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார் ஜெனிலியா.
அதில் தனது மகனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அருகில் இருந்து கண்டுரசிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நீ பறப்பதற்கு இறக்கைகள் கொடுத்து அவற்றுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன். நான் உன்னை அளவுக்கு அதிகமாய் நேசிக்கிறேன். என்னை அம்மாவாக்கிய சிறு பையனுக்கு, என் முதல் பிறப்புக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
“எப்போது என்ன நடந்தாலும் நீ உன்னை நம்பவேண்டும். நான் எப்போதும் உன்னை நம்புகிறேன்,” என்று ஜெனிலியா குறிப்பிட்டுள்ளார்.